வடகிழக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்பு...!

வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியின்  தாக்கத்தால் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது அக்டோபர் 23ஆம் தேதியன்று மேற்கு மத்திய வங்கக் கடலில்  மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.