” மக்களவைக்கு வரப் போவதில்லை” - சபாநாயகர் ஓம்பிர்லா.

” மக்களவைக்கு வரப் போவதில்லை”  - சபாநாயகர் ஓம்பிர்லா.

அவை நடவடிக்கைகளுக்கு பாஜக மற்றும் எதிர்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கும் வரை மக்களவைக்கு வரப்போவதில்லை என சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கக் கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடும் நிலையில், பாஜகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Winter session: 116% productivity for Lok Sabha; 99% for Rajya Sabha |  India News - Times of India

இந்நிலையில் இருதரப்பினரின் மீதும் கடும் அதிருப்தி தெரிவித்த ஓம்பிர்லா, அவையை கண்ணியத்துடன் நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என கண்டிப்புடன் தெரிவித்தார்.

மக்களவை இன்று தொடங்கியபோதும், தனது இருக்கைக்கு ஓம்பிர்லா செல்லாதது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க  | "பிரதமர் நாற்காலியை பிறப்புரிமையாக கருதுகிறது காங்கிரஸ்" பிரல்ஹாத் ஜோஷி!!