திரெளபதி முர்முவை ஆதரிப்பது குறித்து பரிசீலனை.. மம்தா பானர்ஜி அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை ஆதரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரெளபதி முர்முவை ஆதரிப்பது குறித்து பரிசீலனை.. மம்தா பானர்ஜி அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து பேசிய அவர்,

திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து தங்களிடம் பாஜக கலந்தாலோசிக்கவில்லை எனவும் தங்களிடம் கருத்து மட்டுமே கேட்டதாகவும் தெரிவித்தார்.

சிறுபான்மை பழங்குடியின இனத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை அவர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துவது முன் கூட்டியே தெரிந்திருந்தால், அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலித்திருப்போம் எனவும் கூறினார்.

பழங்குடியின மக்கள் மீது தாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். பாஜக கூட்டணி அப்துல்காலமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்திய போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவரை ஆதரித்ததையும் மம்தா சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மம்தாவின் இந்த தீடீர் மாறுபட்ட பேச்சு எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் முன்னெடுத்த ஒரு விஷயத்தில் தோல்வி பயத்தின் காரணமாக அவர் பின்வாங்குவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன.