பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு:

பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு:

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் சந்திப்பை நடத்தினார்.

முதலமைச்சர்களுட சந்திப்பு:

நாட்டின் நலத் திட்டங்களின் செறிவூட்டப்பட்ட அளவிலான பயன்பாட்டை உறுதிசெய்து, நாட்டில் வணிகச் சூழலை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.

4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 18 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் உடனிருந்தார்.

மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் கட்சியின் நல்லாட்சி குழுவின் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பாஜக அறிக்கை:

இந்த சந்திப்பின் போது, ​​கதிசக்தி, ஹர் கர் ஜல், ஸ்வாமித்வா போன்ற சில முக்கிய திட்டங்களின் நேரடி பலன் மற்றும் அரசின் முன்முயற்சிகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தியதாக பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அனைத்து முக்கிய திட்டங்களின் பலன்களை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநிலங்கள் இதை சிறப்பக நிறைவேற்றுவதை நோக்கி முன்னேற வேண்டும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

"நாட்டின் வணிகச் சூழலை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களை அவர் ஊக்குவித்தார்" என்று கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தங்கள் மாநிலங்கள் விளையாட்டுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்குவதையும், இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதற்கான ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் முதலமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், இந்த மாநிலங்களில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றவிருக்கும் திட்டங்கள்:

நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கான  உத்திகளை அதிக பொறுப்புணர்வை உறுதிசெய்ய வேண்டும் என உறுதி எடுக்கப்பட்டது.  மின்-ஆளுமை அமைப்புகளின் பயன்பாடு, தொலைதூரப் பகுதிகளுக்கும் முழுமையாக அளிப்பது மற்றும் தகுதியான பயனாளிகளுக்கு 100 சதவீத பலனை அடைய செய்வது ஆகியவை கூறித்து விவாதிக்கப்பட்டன.

அம்ரித் சரோவர் பணியின் முன்னேற்றம் மற்றும் ஹர் கர் திரங்கா பிரச்சாரத்திற்கான தயாரிப்பு ஆகியவை பற்றி கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து முதலமைச்சர்களும் நல்லாட்சி மூலம் 'ஆசாதி கா அம்ரித் மகத்சவ்’ஐ சகாப்தமாக மாற்ற பாடுபட வேண்டும் என உறுதி எடுக்கப்பட்டுள்ளது.