ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக பாலிக்கு செல்லும் பிரதமரின் புறப்பாடு அறிக்கை..!!

ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக பாலிக்கு செல்லும் பிரதமரின் புறப்பாடு அறிக்கை..!!

இந்தோனேசியாவின் தலைமையில் நடைபெறவுள்ள 17வது G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் 14-16 நவம்பர் 2022 அன்று இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறேன் என தெரிவித்தார் பிரதமர் மோடி.

பாலி உச்சிமாநாட்டின் போது, ​​உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் மாற்றம் போன்ற உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து G20 அமைப்பின் மற்ற தலைவர்களுடன் விரிவான விவாதங்களை நடத்துவேன் எனவும்  ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, பங்கேற்கும் பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வேன் எனவும் அறிக்கையில் கூறியுள்ளார்.

15 நவம்பர் 2022 அன்று பாலியில் உள்ள இந்திய சமூகத்தினரின் வரவேற்பறையில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இதையும் படிக்க:  ஜி-20ல் தாமரை..தேர்தல் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பாஜக.. முற்றும் வார்த்தை போர்..

நமது நாட்டிற்கும் குடிமக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக 2022 டிசம்பர் 1 முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக G20 தலைமைப் பொறுப்பை ஏற்கும் எனவும் அடுத்த ஆண்டு நமது G20 உச்சி மாநாட்டிற்கு G20 உறுப்பினர்கள் மற்றும் பிற அழைப்பாளர்களுக்கு எனது தனிப்பட்ட அழைப்பை வழங்குவேன் எனவும் அறிக்கையில் கூறியுள்ளார் மோடி.

மேலும் தெரிந்துகொள்க:    ”உலகம் ஒரு குடும்பம்” ஜி-20 இலச்சினை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி!! ஜி-20 இலச்சினைக்கான பிரதமரின் விளக்கம் என்ன? விரிவாக காணலாம்!!

G20 உச்சிமாநாட்டில் எனது உரையாடல்களின் போது, ​​இந்தியாவின் சாதனைகள் மற்றும் உலகளாவிய சவால்களை கூட்டாக எதிர்கொள்வதில் நமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நான் எடுத்துரைப்பேன் எனவும் இந்தியாவின் G20 தலைமையானது "உலகம் ஒரு குடும்பம்" அல்லது "ஒரே பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்" என்ற கருப்பொருளில் அமைந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் மோடி.

இது அனைவருக்கும் சமமான வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட எதிர்காலம் என்ற செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனக் கூறி அறிக்கையை முடிவு செய்துள்ளார் பிரதமர் மோடி.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ”இந்திய சமூகத்தினரை சந்திப்பதில் ஆவலுடன் இருக்கிறேன்...” பிரதமர் மோடி!!!