பண்டோரா பேப்பர்ஸ் குறித்து விசாரணை நடத்தப்படும் - மத்திய அரசு

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் குறித்து விசாரணை நடத்தப்படும் - மத்திய அரசு

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோர் வெளிநாடுகளில் கோடிக்கணக்கான சொத்துகளை சட்டவிரோதமாக வாங்கிக் குவித்தது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்பட 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேரடி வரிகள் வாரியம், அமலாக்க இயக்குனரகம், ஆர். பி.ஐ. ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தும் என்றும், உயர்நிலைக்குழு விசாரணையை நேரடி வரிகள் வாரிய தலைவர் கண்காணிப்பார் எனவும், அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.