சொகுசு கப்பலில் கொரோனா தொற்று பாதித்த பயணிகள் : கோவிட் பராமரிப்பு மையத்திற்கு மாற்றம்

சொகுசு கப்பலில் கொரோனா தொற்று பாதித்த பயணிகள்

சொகுசு கப்பலில் கொரோனா தொற்று பாதித்த பயணிகள் : கோவிட் பராமரிப்பு மையத்திற்கு மாற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், அதில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 6 பேரை மட்டும் கோவாவில் இறக்கி விட்ட நிலையில், மீதமுள்ள கொரோனா நோயாளிகளுடன் சொகுசு கப்பல் மும்பை திரும்பியது.

இதனையடுத்து கொரோனா தொற்றாளர்களான 60 பேர், ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள கோவிட் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, கப்பலில் இருந்த மற்ற பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வரும் வரை, அவர்கள் அனைவரும் கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தாலும், அவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.