பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்… எதற்கு..?

வங்கி பணப்பரிவர்த்தனை விதிகளை மீறியது தொடர்பாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்… எதற்கு..?

வங்கி பணப்பரிவர்த்தனை விதிகளை மீறியது தொடர்பாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணம் செலுத்தும் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007-யில் குறிப்பிடப்பட்டுள்ள பணப்பரிமாற்ற விதிகளை பேடிஎம் மீறியதற்காகவும், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் இறுதி அங்கீகார சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம், அதன் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை எனவும் இக்காரணங்ளுக்காக அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கத்திய யூனியன் நிதிச் சேவைக்கு 27. 8 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேற்கத்திய யூனியன் நிதிச் சேவைகளுக்கு ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட பணப்பறிமாற்ற வரம்பை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.