மக்களே உஷார்..! "62 மருந்துகள் தரமற்றவை" மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

மக்களே உஷார்..! "62 மருந்துகள் தரமற்றவை" மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் நடத்திய சோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஹிமாச்சலப் பிரதேரம், பஞ்சாப், உத்திரகண்ட் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும். 

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து பொருட்களும் மத்திய, மாநில் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இவற்றின் வழியாக போலி மருந்துகள் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

கடந்த மாதத்தில் 1,188 மருந்து பொருட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் கிருமித் தொற்று, இரைப்பை அழற்சி, காய்ச்சல், சளி, விட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறிப்பட்டது. இதையடுத்து அதன் விவரங்களை மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலை பார்க்க: https://cdsco.gov.in/opencms/opencms/system/modules/CDSCO.WEB/elements/download_file_division.jsp?num_id=MTA1ODM=

இதையும் படிக்க:ஆயுத பூஜை; கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை!