பி.எச்.டி. முதுகலை பட்டப்படிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்  என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

பி.எச்.டி. முதுகலை பட்டப்படிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


இதுதொடர்பான அறிவிப்பில், 2021-22 ஆம் ஆண்டு பிஎச்டி மற்றும் முதுகலை படிப்பில் சேர விரும்புவோர் ஆன்லைன் மூலமாக,  www.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்க ஆகஸ்ட் 14-ஆம் தேதி கடைசி நாள் என்றும் கூறப்பட்டுள்ளது.  

மேலும், விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாயாகவும்,  எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், முதுகலைப் பட்ட மேற்படிப்புக்கு பொதுப்பிரிவினருக்கு 600ரூபாயும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 300 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாடு முழுவதும் 42 மையங்களில் நுழைவுத்தேர்வு வரும் செப் 2,3,4 ஆகிய தேதிகளில் நடத்தப் படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.