பிரான்ஸ் அதிபர் பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடல்.....!!!!

பிரான்ஸ் அதிபர் பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடல்.....!!!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கிரானுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.  

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கிரானுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிரான்சில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் காட்டு தீ குறித்த விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி அவருடைய வருத்தங்களை பிரான்ஸ் அதிபரிடம் பகிர்ந்து கொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 மேலும்,  இரு நாடுகளிடையே முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் அணுசக்தி விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிய வருகிறது.  இவை தவிர சர்வதேச உணவு பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்தும் இருவரும் விவாதித்துள்ளதாக கூறியுள்ளனர். இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையில் அண்மை காலங்களில் ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் ஆழமான வலிமை குறித்து இருவரும் மன நிறைவு தெரிவித்ததோடு புதிய துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்பட இருநாட்டு உறவை மேலும் விரிவு படுத்த இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து நெருங்கிய பணியாற்ற இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மீண்டும் போர் பயிற்சியில் இறங்கிய சீனா : ஏன் இந்த ஆத்திரம்?