அயோத்தியில் ராமர் கோயில்... சிலை மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்ட திட்டம்...

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் ராமர் சிலை மீது சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில்... சிலை மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்ட திட்டம்...

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் ராமர் சிலை மீது சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ராமஜென்மபூமி அறக்கட்டளையின் உறுப்பினர் காமேஸ்வர் சவுபால், ஒவ்வொரு ராம நவமியன்றும் அயோத்தி ராமர் கோயிலுக்குள் ராமர் சிலை மீது சூரிய கதிர்கள் நேரடியாக விழுந்து, கர்ப்பகிரகம் ஒளிரும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கோனார்க்கில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரிய கோயிலை பின்பற்றி இந்த யோசனை உதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சூரிய கதிர்களை எப்படி விழச்செய்வது? என வானியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும், தேசிய கட்டிட கட்டுமான நிறுவனம், டெல்லி ஐ. ஐ.டி., மும்பை ஐ. ஐ.டி., ரூர்க்கி ஐ. ஐ.டி. ஆகியவற்றை சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.