நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் ஒத்திவைப்பு...

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும், ககன்யான் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் ஒத்திவைப்பு...

டெல்லியில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் சார்பாக, எதிர்கால விண்வெளி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசிய விண்வெளித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ,இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ககன்யான் திட்டத்தின் கீழ், 2022ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், 2022 இறுதியில் அல்லது 2023ல், ககன்யான் திட்டத்தில் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவர். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவு நாடுகள் இந்தியாவுடன் இணைந்து விண்வெளி தொழில்நுட்ப தீர்வுகளை தரவும், புதிய பொருட்கள் கண்டுபிடிப்பில் ஈடுபடவும் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.