டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வருகிற 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காற்று மாசுபாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என டெல்லி அரசு அறிவித்தது. இதை எதிர்த்து ராகுல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பட்டாசு வெடிப்பதால் மட்டும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருவதால், அந்த வழக்கின் போக்கை கொண்டே இதனை விசாரிக்க முடியும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.