பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லியில் பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீல் பிரதான சுரங்கம் உட்பட 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லியில் உள்ள ஐடிஓ, மதுரா சாலை மற்றும் பைரன் மார்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் படி 920 கோடி ரூபாய் மதிப்பில் டெல்லியில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த சுரங்கப்பாதையில் தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை உலக தரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சுரங்கப்பாதைகளின் கட்டுமான பணி நிறைவடைந்ததை அடுத்து,  பிரதான சுரங்கப்பாதை உட்பட 6 சுரங்கப்பாதைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் பிரகதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.