வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரஷாந்த் உம்ராவ்...! நீதிமன்றத்தில்  ஆஜர்...!!

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பிரஷாந்த் உம்ராவ்...! நீதிமன்றத்தில்  ஆஜர்...!!

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரஷாந்த் உம்ராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தில்  ஆஜரானார்.

வட மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் என்ற நபர் வட மாநிலத்தவர்களை தமிழகத்தினை சேர்ந்தவர்கள் வேலைக்கு வந்த இடத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரப்பியதால் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் என்ற நபர் மீது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில்சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு பிரசாத் உம்ராவ் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் பிரசாந்த் உம்ராவ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தொடர்ந்து 15 நாட்கள் ஆஜராக உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, பிரசாத் உம்ராவ் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம் பிரசாந்த் உம்ராவை இன்று தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, திங்கள் கிழமை  தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் பிரஷாந்த் உம்ராவ் ஆஜரானார். இவரை திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் மற்றும் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையானது, சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக  தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் சொத்து ஜாமின் காண்பிப்பதற்காக இன்று காலை 10:10 மணியளவில் ஆஜரானார்.