குடியரசு தலைவர் பிரதமர் மோடி உத்தரபிரதேசம் பயணம்: ரூ.80,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மோடி!

குடியரசு தலைவர் பிரதமர் மோடி உத்தரபிரதேசம் பயணம்: ரூ.80,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மோடி!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக இன்று உத்தரபிரதேசம் செல்கின்றனர்.

அந்தவகையில் இரு நாள் பயணமாக அங்கு செல்லும் குடியரசு தலைவர் தனது சொந்த ஊரான பாராவூங்கில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனைத்தொடர்ந்து நாளை கான்பூரில் உள்ள மெர்சன்ட் சேம்பரின் 90வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, நூற்றாண்டு பழமையான  கீதா பிரஸ் என்ற இந்து பதிப்பகத்தின் விழாவிலும் பங்கேற்கிறார்.

இதேபோல் இன்று லக்னோ செல்லும் பிரதமர் மோடி 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து குடியரசு தலைவருடன் கான்பூரில் உள்ள பத்ரி மாதா மந்திருக்கும் செல்வார் என கூறப்படுகிறது.