குடியரசுத் தலைவருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து பேசினார்.

குடியரசுத் தலைவருடன் உள்துறை அமைச்சர்  அமித்ஷா சந்திப்பு

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து பேசினார்.

புதிய அமைச்சரவையில்  கூட்டுறவுத்துறை என்ற  புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அமித் ஷாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

கூட்டுறவுத்துறை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் புதிதாக கூட்டுறவுத்துறையை உருவாக்கியுள்ளதால், மாநில அரசுகளில் உரிமைகள் பறிபோகலாம் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமித்ஷா குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுறவுத்துறையின் அமைச்சராக கூடுதல் பொறுப்பை ஏற்ற பின்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை அமித்ஷா சந்திக்கும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.