தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் நிறைவு...அடுத்ததாக மைசூர் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு!

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் நிறைவு...அடுத்ததாக மைசூர் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு!

மைசூரில் புலிகள் காப்பகத்தின் 50ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மைசூரில் புலிகள் காப்பகத்தின் 50ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா புலிகளைக் காப்பாற்றியது மட்டுமின்றி அது செழிக்க சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : திருச்சி மிகப்பெரிய மையமாக மாறும் - அமைச்சர் கே. என்.நேரு!

மேலும் ஆஸ்கார் விருதை வென்ற எலிஃபண்ட் விஸ்பர்ஸ் ஆவணப்படம் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் இடையிலான அற்புதமான உறவைப் பற்றிய பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து நமது பழங்குடி சமூகத்தின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தில் இருந்து ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறும் கூறினார். அதனை தொடர்ந்து புதிய ஐம்பது ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.