நாட்டிற்கு 5வது...ஆனால் தென்மாநிலங்களுக்கு முதலாவது...தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

நாட்டிற்கு 5வது...ஆனால் தென்மாநிலங்களுக்கு முதலாவது...தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, நாட்டின் 5-வது “வந்தே பாரத்” ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெங்களூருக்கு வருகை புரிந்த பிரதமர்:

தென் மாநிலங்களுக்கு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் மோடி, பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, பிரதமர் மோடியை, அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோர்  வரவேற்றனர். அப்போது, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநில பாஜக பொறுப்பாளர் அருண் சிங்கும் உடனிருந்தனர். 

இதையும் படிக்க: வாக்குறுதிகளை அள்ளி வீசிய கட்சிகள்.. ! இமாச்சல் தேர்தல் வாக்குறுதிகள் எனென்ன?

கனகதாசர் மற்றும் வால்மீகி சிலைக்கு மாலை அணிவித்த பிரதமர்:

விமான நிலையத்தில் இருந்து விதான்சௌடா எம்.எல்.ஏ மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள கனகதாசர் மற்றும் வால்மீகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்:

பின்னர், கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த பிரதமர், நாட்டின் 5-வது மற்றும் தென் மாநிலத்தின் முதலாவது “வந்தே பாரத்” ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதே போல், ”பாரத் கௌரவ் காசி தர்ஷன்” ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.