கல்வித்துறையில் புதிய மாற்றங்கள் வருமா? இன்று மாணவர்களுடன் பேசுகிறார் பிரதமர் மோடி!

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இன்று கலந்துரையாட உள்ள பிரதமர் மோடி, கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.  தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு காணொலி மூலம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இன்று நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.