பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி...

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார்.

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி...

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு உலக தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உங்களது வாழ்த்துகள் வாயிலாக தம்மை நெகிழ செய்து விட்டீர்கள் என்றும், அவை நம் நாட்டுக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி பணியில் நேற்று சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இதற்காக இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்றும், இதை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரது பணியும் மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.