பிரதமர் மோடியின் அரசு முறைப் பயணம் நிறைவு.!

பிரதமர் மோடியின் அரசு முறைப் பயணம் நிறைவு.!

அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வந்தடைந்தார். 

9 நாட்கள் அரசுமுறைப் பயணமாக முதன்முறை கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரை சந்தித்தார். மேலும், நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார்.2 தொடர்ந்து அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களின் இயக்குநர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு தொழில் முனைப்புகளை ஈர்க்கும் பணியிலும் ஈடுபட்டார். 

அப்போது அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளிகளை சந்தித்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளுடன் பல்வேறு உடன்படிக்கைகள் குறித்து பிரதமர் மோடி வட்ட மேசை ஆலோசனையிலும் ஈடுபட்டார். 

அதன்பின் எகிப்து சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டுக்கு வருகை தரும்படி எகிப்து அதிபர் சிசிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் டெல்லியின் பாலம் விமான நிலையத்தில் மலர் கொத்துகள் அளித்து வரவேற்றனர். 

இதையும் படிக்க     | "திமுக ஆட்சி விரைவில் கவிழும்" எடப்பாடி பழனிச்சாமி ஆரூடம்!