ரூ.16 ஆயிரம் கோடியில் விரைவுச் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் பிரதமர்...!

ரூ.16 ஆயிரம் கோடியில் விரைவுச் சாலையை  நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் பிரதமர்...!

கர்நாடகா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 8 ஆயிரத்து 480 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள ஹுப்பாளி-தார்வாத் இடையே 118 கிலோ மீட்டர் விரைவுச்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து இந்தாண்டு ஆறாவது முறையாக அம்மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாண்டியா மாவட்டத்துக்கு காரில் வந்த பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் கூடியிருந்த பிஜேபியினர், பொதுமக்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படிக்க : புதுக்கோட்டை மீனவர்கள் உட்பட 20 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை... !

இதையடுத்து நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் நிதின்கட்காரியுடன் பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையின் வளர்ச்சியை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சியினை பார்வையிட்டார்.

தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, 16 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகியுள்ள ஹுப்பாளி-தார்வாத் விரைவுச்சாலையினை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். தற்போது திறக்கப்பட்ட இந்த விரைவு சாலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகவும் நாட்டின் வளர்ச்சியை கண்டு இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டே பலர் கலந்து கொண்டனர்.