ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு..!!

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு..!!

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில்  இன்று அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜம்மு- காஷ்மீரின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு காஷீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் நிலவும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.