கர்நாடகா சட்டச்சபையில் மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல்: நகலை கிழித்தெறிந்த காங்கிரஸ் கட்சியினர்...

கர்நாடகா சட்டமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட மதமாற்ற தடை சட்ட மசோதாவை, அம்மாநில காங்கிரஸ் தலைவர் கிழித்தெறிந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடகா சட்டச்சபையில் மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல்: நகலை கிழித்தெறிந்த காங்கிரஸ் கட்சியினர்...

கர்நாடகாவில் மதமாற்றம் செய்ய முயன்றதாக அண்மையில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது தாக்கல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் போல் கர்நாடகாவில் இச்சட்டம் கொண்டு வரப்படும் என கர்நாடகா பாஜக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்தநிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற  சட்டமன்ற கூட்டத்தில்  மதமாற்ற தடை சட்ட மசோதா இன்று  தாக்கல் செய்யப்பட்டது. அப்போது  சட்ட நகலை மாநில காங்கிரஸ் தலைவர்  கிழிந்தெறிந்ததால் பரபரப்பு நிலவியது.மேலும் கர்நாடக பாசிச அரசின் நடவடிக்கையை கண்டித்து  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், அவையில் இருந்து  வெளிநடப்பு செய்தனர்.