புதுச்சேரி : ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டில் இந்தியில் செய்முறை விளக்கம்...! புதிய சர்ச்சை...!

புதுச்சேரி : ஓ.ஆர்.எஸ்  பாக்கெட்டில் இந்தியில் செய்முறை விளக்கம்...! புதிய சர்ச்சை...!

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டில் செய்முறை விளக்கம் தமிழில் இல்லாமல், இந்தியில் அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதுச்சேரி ஜிப்மரில் இந்தி கட்டாயம் என அதன் இயக்குனர் தெரிவித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பியது. இது போன்ற காரணங்களால், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்கள் மற்றும் பிரச்சார இயக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்காக வழங்கப்படும் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டில் செய்முறை விளக்கம் தமிழில் இல்லாமல், இந்தியில் அச்சிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் புதுச்சேரி மாநிலத்தில் மருந்து, மாத்திரைகளில் கூட மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இதையும் படிக்க : பால்வியாபாரி தீக்குளிக்க முயற்சி... வீடியோ வைரலானதால் பரபரப்பு...