”காசிக்கும் தமிழுக்கும் பிரமாண்ட இணைப்பு அந்த காலத்தில்....?” - புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

”காசிக்கும் தமிழுக்கும் பிரமாண்ட இணைப்பு அந்த காலத்தில்....?” - புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

தமிழ்-காசி சங்கமம் என்று தமிழுக்கும் காசிக்கும் இருக்கும் கலாச்சார, ஆன்மீக, சமூக இணைப்பை போற்றும் மாபெரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் இருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க காசிக்கு செல்வதற்காக பதிவு செய்துள்ளனர். அவர்களை புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியில் உள்ள கங்கைவாராகநதீஸ்வர் கோவிலில் இருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதனை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டு நிகழ்ச்சி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து  கங்கைவாராக நதீஸ்வரரை வணங்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மொத்தம் 22 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அதில் புதுச்சேரியில் இருந்து 300 பேர் பதிவு செய்துள்ளனர். நேற்று புதுச்சேரியில் இருந்து 8 மாணவர்கள் காசிக்கு சென்றுள்ளனர். காசிக்கும் தமிழுக்கும் மிக பிரமாண்ட ஒரு இணைப்பு அந்த காலத்தில் இருந்தே உள்ளது. பாரதியாரும் இது குறித்து பேசி உள்ளார் என்றும் கலாசார ஆன்மீக இணைப்பு இருந்துள்ளது . காசி ராமேஸ்வரம் என்றுதான் கூறுவார்கள், நமக்கும் காசிக்கும் ஒரு இணைப்பு இருந்துள்ளது; திருக்காஞ்சிக்கும் காசிக்கும் ஒரு இணைப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். பாரத தேசத்தின் ஒன்றுபட்ட ஒற்றுமையை வலியுறுத்துவதாக நிகழ்வு இருக்கின்றது. காசி தமிழ் சங்கமத்தின் ஒருபகுதியாக இங்கு வந்தோம் என தெரிவித்தார்.

இதையும் படிக்க : அடிப்படை வசதி கூட இல்லாத மாணவர் விடுதி ; அரசு கல்லூரி மாணவர்கள் தர்ணா...