பஞ்சாப் முதலமைச்சருக்கு 10,000 ரூபாய் அபராதம்:

குப்பைக் கொட்டியதாகக் குற்றம் சாட்டி , சண்டிகரில் இருக்கும் பஞ்சாப் முதலமைச்சரின் இல்லத்திற்கு சண்டிகர் மாநகராட்சி பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் முதலமைச்சருக்கு 10,000 ரூபாய் அபராதம்:

சமீபகாலமாக பேசுபொருளாகி வரும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வாந்த் மன், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சண்டிகரில், தனது இல்லத்தைச் சுற்றி குப்பைகளை விசிரியடிக்கும் குற்றத்திற்காக, சண்டிகர் மாநகராட்சி அவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. சண்டிகரின் செக்டார் 2 வில் இருக்கும், 7ம் வீடு என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் பேரில் சலான் வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், மாசுப்பட்ட நதி நீர் எனக் கூறப்பட்ட கங்கை நீரை, மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர் முன்னிலையில், பக்வாந்த் சிங் கிளாசில் எடுத்துக் குடித்தார். அது மாசுடையது அல்ல என நிரூபிக்க செய்யப்பட்ட அந்த செயல், அவருக்கே பெரும் பாதகமாக அமைந்தது. ஏன் என்றால், அவருக்கு, வயிற்றுப் போக்கு வந்து இரண்டு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இப்பொழுது தான் வீடு திரும்பினார். அதற்குள் இந்த சம்பவம் நடந்ததால், பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

2ம் செக்டாரில் உள்ள 44,45, 6 மற்றும் 7 ஆகிய வீடுகள், முதல்வர் பக்வாந்த் மன் -னின் வீட்டு பகுதிகளில் அடங்கும் எனக் கூறிய அப்பகுதி கவுன்சிலர் மகேந்திர சிங் சிந்து, அவரது வீட்டின் பின் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்ததைப் பற்றி கூறினார். இது குறித்து பேசிய போது, “அவரது வீட்டு வேலைக்காரர்கள், தெருவின் பின்புறத்திலும், வீட்டைச் சுற்றியும் குப்பைகள் கொட்டுவதாகக் புகார்கள் பல முறை எழுந்தன. மேலும், இது குறித்து பல முறை துப்புரவு பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்தாலும் அதனை மதிக்காமல் மேலும் குப்பைகள் கொட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேலாவது சுத்தத்தைக் கடைப்பிடிப்பார்களா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

அது மட்டுமின்றி, “ஒரு மாநில முதல்வர் தனது பிரஜைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், அவரது வீடே இங்கு முறையின்றி இருக்கிறது” என கூறியுள்ளார்.

இந்த அபராதம், முதல்வர் வீட்டில் பணியில் இருக்கும் சிஆர்பிஎப் டிஎஸ்பி ஹர்ஜிந்தர் சிங் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.