மத்திய அரசுக்கு ரூ. 30,307 கோடியை உபரி தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு!!

மத்திய அரசுக்கு ரூ. 30,307 கோடியை உபரி தொகையாக வழங்க ரிசர்வ் வங்கி முடிவு!!

மத்திய அரசுக்கு கடந்த 2021-22-ம் நிதியாண்டின் உபரி தொகையாக 30 ஆயிரத்து 307 கோடி ரூபாய வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது.

ரிசர்வ் வங்கி இயக்குனர்களின் 596-வது கூட்டம் ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் துணை ஆளுநர்கள்  மகேஷ்குமார் ஜெயின், மைக்கேல் தேபபிரதா பத்ரா ,ராஜேஷ்வர் ராவ் மற்றும் ரபிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், நடப்பு பொருளாதார சூழல், சர்வதேச, உள்நாட்டு சவால்கள் மற்றும் சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த2021-22-ம் ஆண்டின் உபரி தொகையாக 30 ஆயிரத்து 307 கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 2021 ஏப்ரல் முதல் கடந்த மார்ச் மாதம் வரை யிலான ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், குறிப்பிட்ட காலத்துக்கான அறிக்கைகள் மற்றும் கணக்குகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.