ரபேல் போர் விமான முறைகேடு குறித்து விசாரணை நடத்தவேண்டும்.. காங்கிரஸ் கோரிக்கை.!

ரபேல் போர் விமான முறைகேடு குறித்து விசாரணை நடத்தவேண்டும்.. காங்கிரஸ் கோரிக்கை.!

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து தனி நாடாளுமன்ற கமிட்டி அமைத்து விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.  

விமானப்படையை பலப்படுத்துவதற்காக பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அதன்பின் வந்த மோடி அரசு, ஒரு விமானத்துக்கு ஆயிரத்து 607 கோடி ரூபாய் என விலை நிர்ணயித்து, 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் விமானங்களை கொள்முதல் செய்ய மறுஒப்பந்தம் செய்தது. 

இதில் 21 ரபேல் விமானங்களை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதனிடையே ரபேல் விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் இந்த முறைகேடு குறித்து ஒருங்கிணைந்த நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார்.