நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு: 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி !

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், இரண்டாவது நாள் விசாரணைக்கு ஆஜரானார். 

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு: 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார் ராகுல் காந்தி !

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று காங்கிரஸ்  எம் பி ராகுல் காந்தி  ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அதிகாரிகள் கேள்விகளை எழுப் பியிருந்தனர். இந்த விசாரணையானது சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப் பியது.

இதனிடையே நேற்று போல் இன்றும், நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்களில் காங்கிரசார் போராட்டம் நடத்த திட்டமிட்டதால், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் செல்லும் வழி எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் கண்டன போராட்டத்தில் ஈடுபட முயன்ற எம். பிக்களை, அலுவலகத்தில் நுழைய விடாமல் போலீசார் கைது செய்ய முற்பட்டதாக, காங்கிரஸ் எம். பி.மாணிக்கம் தாக்கூர் குற்றஞ்சாட்டினார். 

இந்தநிலையில், பிரியங்கா காந்தியுடன் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்ற ராகுல், அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆஜரான ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.