நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் ராகுல் காந்தி கட்டாயம் ஆஜராக வேண்டும் - அமலாக்கத்துறை சம்மன்

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் ராகுல் காந்தி வரும் 13 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் ராகுல் காந்தி கட்டாயம் ஆஜராக வேண்டும் - அமலாக்கத்துறை சம்மன்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை காங்கிரஸ் கட்சியின் 'யங் இந்தியன்' நிறுவனம் முறைகேடாக கையகப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத் துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன்குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அண்மையில் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இவ்வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் விசாரணைக்கு ஆஜராக ராகுல் தரப்பில் கால அவகாசம் வழங்க கோரப்பட்டது. இந்த நிலையில் ராகுல் வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என   அமலாக்கத்துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. 

சோனியா வரும் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர், ஆஜராவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.