மனு தள்ளுபடி - ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

மனு தள்ளுபடி - ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

மோடி சமூகத்தினர் குறித்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவதாக கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவில் ராகுல்காந்தி பேசியிருந்தார். மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தியை எதிர்த்து பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து எம்பி பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாகவும் மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையும் படிக்க : 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்...நாளை முதல் ஆரம்பம்...!

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஏப்ரல் 3ம் தேதி ராகுல்காந்தி நேரில் ஆஜராகி சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவரது ஜாமீனை நீட்டித்தும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதிசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கின் உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, சட்டத்தின் அனைத்து வழிமுறைகளையும் ராகுல்காந்தி வழக்கில் பயன்படுத்துவதாக காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.