ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணம்..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணம்..!!

இந்தப் பயணத்தின்போது ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகனின் திருமண நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

மேலும், அவர் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பிறகு ராகுல் காந்தி  முதல் முறையாக அங்கு பயணம் மேற்கொண்டுள்ளதால் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள கீர்பவானி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.