டெல்லி என்சிஆரில் கனமழை மற்றும் அதி கனமழை எச்சரிக்கை:

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தின் (NCR) பல பகுதிகளிலும் இன்று கனமழை பெய்தது. தேசிய தலைநகரின் பல பகுதிகளில் 'கனமழை' மற்றும் ‘அதி கனமழை' தொடரும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்து, தனது அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

டெல்லி என்சிஆரில் கனமழை மற்றும் அதி கனமழை எச்சரிக்கை:

ஹரியானாவின் மானேசர், சோனிபட், ரோஹ்தக், கர்கோடா, ஜஜ்ஜார், ஃபரூக்நகர், சோஹானா, பல்வால் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், காசியாபாத், இந்திராபுரம், நொய்டா, குருகிராம், பரிதாபாத் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மழையால் எதிர்பார்க்கப்படும் பாதிப்புகள் மற்றும் மழை தொடர்பான ஏதேனும் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது உட்பட, பல தகவல்களைப் பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், சாலைகளில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு, பயண நேரம் அதிகரிக்கலாம் என்றும், டெல்லி-என்சிஆர் பகுதியில் தினசரி பயணிப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்தது. மேலும், 'கட்சா' சாலைகளுக்கு சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது குறிப்பிடத்தக்கது.

மழை நிலவரம் குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள், “உங்கள் பயணத்தை  தொடங்குவதற்கு முன் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசலை சரிபார்த்து, இது தொடர்பாக வழங்கப்படும் போக்குவரத்து அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். அதோடு, பாதிக்கப்படக்கூடிய கட்டிடங்களில் இருந்து விலகி இருங்கள் " என அறிவுறுத்தியுள்ளனர். 

தற்போது, ஹரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழை குறைந்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஜூலை மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவானதே வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் மழை பற்றாக்குறைக்கு காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர், இது மத்திய இந்தியாவில் பருவமழை வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலமாக நீடித்தது.

வங்காள விரிகுடாவில் இந்த ஜூலை மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவானதே, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் மழை பற்றாக்குறைக்கு காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்,