அரிய வகை வன பறவைகள் வேட்டையாடிய நரிக்குறவர்கள்...! மீட்ட வனத்துறையினர்...!

அரிய வகை வன பறவைகள் வேட்டையாடிய நரிக்குறவர்கள்...! மீட்ட வனத்துறையினர்...!

புதுச்சேரியில் உள்ள ஊசுடு ஏரியில் இருந்து இறைச்சிக்காக  வேட்டையாடபட்ட அறிய வகை வன பறவைகளை நரிக்குறவர்களிடம் இருந்து வனத்துறை அதிகாரிகள் மீட்டு வனத்துறைக்கு எடுத்து சென்றனர். 

புதுச்சேரி வில்லியனூர் பத்துகண்ணு சாலையில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதிகளில், வார இறுதி நாட்களில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பென்குயின், பிளமிங்கோ உள்ளிட்ட உள்நாட்டு அரிய வகை வன பறவைகள் வேட்டையாடி இறைச்சிகாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில், இனை இயக்குனர் குமரவேல், வனத்துறை அதிகாரி பிரபாகரன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நரிகுறவர் குடியிருப்பை சோதனையிட்டனர். அப்போது ஊசுடு ஏரியில் இருந்து வேட்டையாடப்பட்டு வைத்திருந்த 20க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள் கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து அத்துடன் இறந்த நிலையில் 5 பறவைகள், 2 கூண்டு, மற்றும் 1 வலை ஆகியவற்றை  வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகளுக்கும் நரிக்குறவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் உள்நாட்டு அரிய வகை வன பறவைகளை இறைச்சிகாக பொதுமக்கள் வாங்க கூடாது என்றும் அப்படி வாங்குபவர்களுக்கு மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது 3 முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை பெற்று தரப்படும் என்றும், அரிய வகை வன பறவைகளை இறைச்சிகாக வாங்குவது சட்டப்படி குற்றம் என ஒரிரு நாட்களில் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் விளம்பர பலகைகள் பொருத்த உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட காதலன்...! போக்சோவில் கைது...!