வந்தே பாரத் ரயில்...இந்திய வளர்ச்சியின் பிரதிபலிப்பு...பிரதமர் உரை!

வந்தே பாரத் ரயில்...இந்திய வளர்ச்சியின் பிரதிபலிப்பு...பிரதமர் உரை!

வந்தே பாரத் ரயில் தற்போதைய நவீன இந்தியாவின் காட்சியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மும்பை- சோலாப்பூர் மற்றும் மும்பை -சீரடி இடையே இரு வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதையும் படிக்க : ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் மறைவது உறுதி... அமைச்சர் தங்கம் தென்னரசு!

தொடர்ந்து, ரயில்வே துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில்கள் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் வேகத்திற்கான பிரதிபலிப்பு என்று கூறினார். இதுவரை 10 வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த வேகத்தை காண முடியும் என்றும் பெருமிதம் கொண்டார். 

முன்னதாக நிகழ்ச்சியில்  உரையாற்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தை சர்வதேச அளவில் மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.