பிடிவாதம் பிடிக்காமல் வீட்டுக்கு திரும்புங்கள்... விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்...

கோரிக்கை நிறைவேறி விட்டதால் பிடிவாதம் பிடிக்காமல் வீட்டுக்கு திரும்புங்கள் என, விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிடிவாதம் பிடிக்காமல் வீட்டுக்கு திரும்புங்கள்... விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்...

நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். மேலும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். வரும் நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடரின் போது 3 வேளாண் சட்டங்களையும் முறைப்படி திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை காத்திருப்போம் என்றும், அதுவரை போராட்டம் நீடிக்கும் எனவும் விவசாய சங்கங்கள் கூறியுள்ளன. இதுகுறித்து பேசிய மத்திய வேளாண் இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, விவசாயிகளில் ஒரு சிறு பிரிவினரின் நலனுக்காக பிரதமர் மோடி எடுத்த முடிவை விட வேறு என்ன தேவை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் விவசாயிகள் கோரிக்கை என்றும், அது நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், எனவே, விவசாய சங்க தலைவர்கள் பிடிவாதம் பிடிக்காமல் உடனே வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும், விவசாய பணிகளை கவனிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.