4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம்  கோடி நிதி திரட்ட இலக்கு…

மத்திய அரசின் உள்கட்டமைப்பு சொத்துக்களின் மூலம் அடுத்த 4 வருடங்களில் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும்  தேசிய பணமாக்கல் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் வெளியிட்டார்.

நாட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக புதுமையான, மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு  நிதிநிலை அறிக்கையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான 6 லட்சம் கோடி சொத்துக்களை தனியாருக்கு 4 ஆண்டுகால குத்தகைக்கு விடும் தேசிய பணமயமாக்கல் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள 25 விமான நிலையங்கள், 400 ரயில் நிலையங்கள், 15 ரயில் விளையாட்டு அரங்கங்கள், 26 ஆயிரத்து 700 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள், உள்பட 12 அமைச்சகங்களின் 20 சொத்துக்கள் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டப்பட உள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதி ஆதாரங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என மத்திய அரசின் பொதுச்சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துகின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.