அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.10,000 மழை நிவாரணம்... முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்...

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மழை நிவாரணமாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.10,000 மழை நிவாரணம்... முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்...

புதுச்சேரி மாநிலத்தில் மழை நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வேளாண் சட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், புதுச்சேரியில் தொடர் மழையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், சிவப்பு அட்டைதாரர்களுக்கு மட்டும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளது ஏற்கதக்கதல்ல என குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பாரபட்சமின்றி 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.