மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை... நவ. 16-ந்தேதி சபரிமலை கோவில் நடைதிறப்பு...

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 16-ந் தேதி திறக்கப்படுகிறது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை... நவ. 16-ந்தேதி சபரிமலை கோவில் நடைதிறப்பு...

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 16-ந் தேதி திறக்கப்படுகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார் பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 16-ந் தேதி திறக்கப்படுகிறது என்றும், 17-ந் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ள தேவஸ்தானம், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி. பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும், அப்படி கொண்டு வராத பட்சத்தில் அந்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளது.