பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்பு

பஞ்சாபின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். 

பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்பு

பஞ்சாபின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். 

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதனால், பஞ்சாப் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றிய அறிவிப்பை ஹரீஷ் ராவத் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

51 வயதே  நிரம்பிய சரண்ஜித் சிங் சன்னி அமரீந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். சம்கவுர் சாகிப் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் மாநிலத்தின் முதல் பட்டியலின முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பஞ்சாப்பின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், புதிய பொறுப்புக்கு வந்திருக்கும் சரண்ஜித் சிங் சன்னி ஜிக்கு வாழ்த்துக்கள் என்றும், பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.