தியாகப் பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர்.. எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி!!

தியாகப் பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர்.. எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி!!

புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தியாகப் பெருஞ்சுவரில் இடம் பெற்றுள்ள சாவர்க்கர் பெயர்ப் பலகையை அகற்றக் கோரி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

75 ஆவது சுதந்திர தின விழா:

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில், நாடு முழுவதும் 75 இடங்களில் தியாகப்  பெருஞ்சுவர் நிறுவப்பட்டு வருகிறது. அவ்வகையில், புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு எதிரே அமைக்கப்பட்ட தியாகப் பெருஞ்சுவரில், பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டு வருகின்றன. அதில் சாவர்க்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

தியாகப் பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர்:

இந்நிலையில், சுதந்திரப் போராட்டத்தில் சாவர்க்கர் எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை என்றும், சாவர்க்கர் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர் என்றும் கூறி, அவரது பெயரை தியாகச்சுவரில் பொறித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு சமூக அமைப்பைச் சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட, ஊர்வலமாக சென்றனர்.

போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார்:

அப்போது, அவர்களை தடுத்தி நிறுத்தியபோது தடுப்புகளை மீறி, சாவர்க்கர், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோரின் உருவப்படங்களை எரித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.