9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு... ஹரியானா அரசு அனுமதி...

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, வரும் 16-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு... ஹரியானா அரசு அனுமதி...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
 
இந்த நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால், மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக, வரும் 16-ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக கூறினார்.