குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபசார விழா

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்று வரும் பிரிவு உபசார விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபசார விழா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளை முடிவடைவதையொட்டி, இன்று அவருக்கு பிரிவு உபசார விழா அளிக்கப்பட்டது.

பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் குடியரசுத் தலைவர் கோவிந்த் குறித்து சிறப்புரையாற்றினார். இதன்பிறகு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பிறகு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். எம்.பி.க்கள் கையொப்பமிட்ட நினைவுச் சின்னம் மற்றும் கையெழுத்துப் புத்தகம் குடியரசு தலைவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி நாளை முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்று இரவு விருந்து அளித்தார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளை முடிவடைவதையொட்டி, இந்தியாவின் 15ஆவது குடியரசத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு திங்கட் கிழமை அன்று பதவியேற்க உள்ளார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்மு, உயர்மட்ட அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடியினர் ஆவார்.