சாருக் மகனின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு  

  போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சாருக் மகனின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு   

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்றுடன் நான்கு நாட்கள் முடிவடைந்த நிலையில், ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், காவலை நீட்டிக்க வேண்டும் என தேசியப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மனு தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்காத நீதிபதிகள், போதுமான காலம் அவகாசம் வழங்கியதாக கூறி ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையில் தமக்கு ஜாமின் வழங்கக்கோரி ஆர்யன் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்யன் கானின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.