தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்... தினமும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவு...

கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்... தினமும் சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவு...

பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

2019ஆம் ஆண்டில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 236 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3 லட்சத்து 71 ஆயிரம் 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பலாத்கார வழக்குகள் மட்டும் 27 ஆயிரத்து 46 என்றும், நாளொன்றுக்கு சராசரியாக 77 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5 ஆயிரத்து 310 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.