மும்பை நகரத்தின் புதிய பாட்ஷா சோனு சூட்... வீடு தேடிச்சென்று உதவிகேட்கும் மக்கள்!!

தன்னிடம் உதவிக்கேட்டு வீட்டு முன் காத்திருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார் சோனு சூட்.

மும்பை நகரத்தின் புதிய பாட்ஷா சோனு சூட்... வீடு தேடிச்சென்று உதவிகேட்கும் மக்கள்!!

கோவிட்-19 தொடர்பாக தன்னால் இயன்ற உதவிகளை செய்து, தேவையான ஏற்பாடுகளையும் சமூக வலைதளம் வாயிலாக செய்து கொடுப்பதில் பிசியாக  இருக்கிறார் நடிகர் சோனு சூட். இவரது வீட்டு முன் உதவிக்கேட்டு  காத்திருந்தவர்களை சந்தித்த அவர் ஆறுதல் கூறினார்.

தனது வீடு முன் உதவிக்கேட்டு காத்திருந்தவர்களை சந்தித்த நடிகர் சோனு சூட், அவர்களது பிரச்சனைகளை செவிசாய்த்து கேட்டதோடு, ஆறுதலும் கூறினார்.

நடிகர் சோனு சூட்டை சந்தித்து உதவிக்கேட்ட ஒருவர், ஒரு கட்டத்தில் அவரது காலில் விழுந்து விட்டார். அவரை  சோனு சூட் ஆறுதல்படுத்தி  தைரியப்படுத்தினார்.