நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்...? இந்திய வானிலை மையம் சொல்வது என்ன?

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்...? இந்திய வானிலை மையம் சொல்வது என்ன?

நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பான அளவில் இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நடப்பாண்டின் தென்மேற்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவ மழைக் காலத்தில், நாட்டில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்றும், சராசரியாக, 83 புள்ளி 5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 100 ரூபாய் வராத ஆத்திரத்தில் ஏடிஎம்க்கு கும்மாங்குத்து விட்ட வாலிபர்.. ! சுக்கு நூறாக நொறுங்கிய ஏடிஎம் இயந்திரம்..!

மேலும், பருவமழைக் காலத்தின் இரண்டாவது பாதியில், மேக வெடிப்பு எனப்படும் கட்டுக்கடங்காத மழை இருக்கக் கூடும். இதனால், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப, தென் மேற்கு பருவ மழை மாறுபட வாய்ப்புள்ளது எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.